வலி மருத்துவம் · சென்னை மற்றும் காணொலி வழி · 2007 முதல்

    உங்கள் வலி பற்றி பேசுவோம். உங்களுக்கு ஏற்ற வழிகளை ஆராய்வோம்.

    முதுகு, கழுத்து, தலை, மூட்டு, நரம்பு வலி போன்றவற்றை முதலில் கவனமாக மதிப்பிடுகிறோம். பிறகு உங்களுக்கு ஏற்ற தேர்வுகளையும் அவற்றின் வரம்புகளையும் தெளிவாக விளக்குகிறோம்.

    தகவலறிந்த முடிவுகள். சிறந்த கவனிப்பு.

    டாக்டர் கே. ரவி கிருஷ்ணா

    Dr K. Ravi Krishna

    வலி மருத்துவ நிபுணர் · மருத்துவக் குழுத் தலைவர்

    WIP-accredited in CIPS and FIPP; American Board certified in Headache Medicine. ஒருங்கிணைந்த மருத்துவக் குழு ஒவ்வொரு நோயாளியின் கவனிப்புக்கும் உதவுகிறது.

    எந்த இடத்தில் அதிகமாக வலிக்கிறது?

    முதலில் கவனமான மதிப்பீடு; பிறகு உங்களுக்கு ஏற்ற திட்டம். கண்டறிந்ததைப் பொறுத்து மருந்துகள், மறுவாழ்வுப் பயிற்சி அல்லது தேவைப்பட்டால் சிகிச்சை முறைகள் பரிசீலிக்கப்படும்.

    கீழ் முதுகுடிஸ்க் பிரச்சினை, சியாட்டிகா (sciatica), முதுகெலும்பு மூட்டு வலிமதிப்பீட்டுக்கு நேரம் கோருங்கள் →கழுத்துகழுத்து டிஸ்க் பிரச்சினை, கைக்குப் பரவும் நரம்பு வலிமதிப்பீட்டுக்கு நேரம் கோருங்கள் →தலை மற்றும் முகம்ஒற்றைத் தலைவலி (migraine), முக நரம்பு வலி (trigeminal neuralgia)மதிப்பீட்டுக்கு நேரம் கோருங்கள் →தோள்பட்டைதோள் இறுக்கம் (frozen shoulder), மூட்டுத் தேய்மானம்மதிப்பீட்டுக்கு நேரம் கோருங்கள் →இடுப்புஇடுப்பு மூட்டுத் தேய்மானம், முதுகிலிருந்து பரவும் வலிமதிப்பீட்டுக்கு நேரம் கோருங்கள் →முழங்கால்முழங்கால் தேய்மானம், அறுவைசிகிச்சைக்குப் பிறகும் தொடரும் வலிமதிப்பீட்டுக்கு நேரம் கோருங்கள் →நரம்பு வலிசர்க்கரை நோய் நரம்பு வலி, அக்கி (shingles) வலிமதிப்பீட்டுக்கு நேரம் கோருங்கள் →உடல் முழுவதும் வலிஃபைப்ரோமையால்ஜியா (fibromyalgia), நீண்டகால பரவலான வலிமதிப்பீட்டுக்கு நேரம் கோருங்கள் →

    முதல் சந்திப்பில் என்ன நடக்கும்?

    1. 01

      நேரம் கோருங்கள்

      அழைக்கவும் அல்லது இணையத்தில் கோரவும். எங்கள் குழு தொடர்புகொண்ட பிறகே சந்திப்பு உறுதியாகும். ஸ்கேன், அறிக்கைகள், தற்போதைய மருந்துப் பட்டியலைக் கொண்டு வாருங்கள்.

    2. 02

      மருத்துவரைச் சந்தியுங்கள்

      அவசரமில்லாமல் உங்கள் வலியின் வரலாறு, பரிசோதனை மற்றும் அறிக்கைகள் பார்க்கப்படும்.

    3. 03

      திட்டம்

      வலிக்கு என்ன காரணமாக இருக்கலாம், என்னென்ன தேர்வுகள் உள்ளன என்பதை எளிமையாக விளக்குவோம். முடிவு உங்களுடையது.

    4. 04

      சிகிச்சை மற்றும் தொடர் கவனிப்பு

      சிகிச்சை தொடங்கிய பின், முன்னேற்றத்தைப் பார்த்துத் திட்டத்தை மாற்ற மீண்டும் சந்திப்போம்.

    இடங்கள், கட்டணம், முன்பதிவு

    நடமாட்ட உதவி (சக்கர நாற்காலி போன்றவை) அல்லது வேறு மருத்துவத் துறையின் ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு மருத்துவமனை இடங்கள் உதவியாக இருக்கலாம். வலி மதிப்பீடு மற்றும் தொடர் கவனிப்புக்கு கிளினிக் இடங்களைத் தேர்வு செய்யலாம்.

    கிளினிக் இடங்கள்

    OMR – Perungudi · T. Nagar · Nungambakkam

    மருத்துவமனை இடங்கள்

    Apollo Hospitals – Greams Road · AINU – Nungambakkam · Sooriya Hospital – Mahalingapuram

    கட்டணம்

    ஆலோசனைக் கட்டணம் Rs 1000. சில மருத்துவமனை இடங்களில் கூடுதல் வசதிக் கட்டணம் இருக்கலாம்; நீங்கள் தேர்வு செய்யும் இடத்துக்கான கட்டணம் முன்பதிவின்போதே காட்டப்படும்.

    தொலைபேசியில் உதவி

    படிவம் நிரப்புவது கடினமாக இருந்தால் அழைக்கலாம் அல்லது WhatsApp செய்யலாம். தமிழில் பேசலாம்; தமிழில் ஆலோசனையும் கிடைக்கிறது.

    வரவேற்பு அலுவலகம்: திங்கள்–சனி, காலை 8 முதல் இரவு 9 வரை

    Trident Pain Clinics அவசர சிகிச்சை சேவை அல்ல. திடீர் கடுமையான வலி, புதிய பலவீனம் அல்லது உணர்வின்மை, சிறுநீர் அல்லது மலம் கட்டுப்பாடு இழப்பு, அல்லது நெஞ்சுவலி இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுங்கள்.